வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 19 நவம்பர் 2014 (13:49 IST)

ஷெல் இந்தியா நிறுவனம் செலுத்த வேண்டிய 18 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி

ஷெல் இந்தியா நிறுவனம் வருமான வரித்துறைக்குக் கட்ட வேண்டிய 18 ஆயிரம் கோடி ரூபாயை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 
இது தொடர்பாக வணிக வரித்துறை மேற்கொண்ட சோதனையில், ஷெல் இந்தியா மார்க்கெட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2007-08ஆம் ஆண்டில் 15 ஆயிரம் கோடி ரூபாயும், இந்திய துணை ராயல் டச் ஷெல் நிறுவனம் 2008-09ஆம் ஆண்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரியுமாக, மொத்தம் 18 ஆயிரம் கோடி ரூபாய் வரியாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால், மும்பை உயர்நீதிமன்றம், ஷெல் இந்தியா நிறுவனம் கட்ட வேண்டிய வரித்தொகையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் வருமானவரித்துறைக்கு மேலும் ரூ.18,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முன்னதாக ஃவோடாபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.4,500 கோடியை வருமானவரித்துறை கடந்த மாதம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.