வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2015 (14:38 IST)

விடுதலைப் புலிகளால் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு இல்லை: தமிழக அரசு கூடுதல் மனு

முல்லைப்பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளால் எந்த நேரடி பாதிப்பும் இல்லை என்று தமிழக அரசு கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளது.
 
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் விடுதலைப்புலிகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை.
 
பல தீவிரவாத இயக்கங்களால் அணைகள் போன்ற கட்டுமானங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவு அறிக்கையால் மத்திய பாதுகாப்பு கோரப்பட்டது.
 
விடுதலைப்புலிகள் குறித்த நுண்ணறிவுப் பிரிவின் அறிக்கையில் தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லை.” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முல்லை பெரியாறு அணை வலுவிழந்தது வருவதாகக் கூறி, கேரளா அரசு புதிய அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆய்வுப்பணிகளை கேரளா தொடங்கியது.
 
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் அனுமதியின்றி கேரளா புதிய அணை கட்ட கூடாது என்றும் அணைக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழகம் சார்பில் வாதிடப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கடந்த 3 ஆம் தேதி நடந்த விசாரணையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி தத்து தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, கேரளாவிற்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி நான்கு வராங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.
 
இந்நிலையில், தமிழக அரசு புதிய மனு ஒன்றை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது, அந்த மனுவில் "முல்லைப் பெரியாறு அணைக்கு லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகம்மது, இந்தியன் முஜாஹிதீன் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளால் ஆபத்து உள்ளது.
 
இது தொடர்பாக உளவுத்துறையின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தேவை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.