1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 28 நவம்பர் 2014 (19:10 IST)

எதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும், லாலு பிரசாத்தும் சம்பந்தி ஆகின்றனர்

உத்திரபிரதேசத்தில் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வந்த முலாயம் சிங் யாதவும், லாலு பிரசாத்தும் சம்பந்தி ஆகின்றனர்.
 
உத்திரப் பிரதேசத்தில் ஒரு கட்டத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் எதிர் எதிர் கட்சிகளாக செயல்பட்டு வந்தன.
 
ஆனால் இந்த இரு கட்சிகளும் கடந்த பாராளுமன்ற தேர்தலில், கடுமையான தோல்வியைச் சந்தித்தன. மேலும் சில மாதங்களுக்கு முன்பு இவ்விருக் கட்சிகளும் இணைந்து போட்டியிட முடிவு செய்தன. இதன்படி, சில மாதங்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலை இரு கட்சிகளும் இணைந்தே சந்தித்தன. அதற்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு பலனும் கிடைத்தது.
 
தற்போது முலாயம் சிங் யாதவும், லாலு பிரசாத்தும் உறவுகள் மூலம் இணைய உள்ளனர். முலாயம் சிங் யாதவின் பேரன் தேஜ் பிரதாபுக்கும், லாலு பிரசாத்தின் மகள் ராஜலட்சுமிக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
 
இவர்களது நிச்சயதார்த்தம் டிசம்பர் மாதமும், திருமணம் வரும் பிப்ரவரி மாதமும் நடைபெற உள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.