வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2016 (13:13 IST)

நான் மிகப்பெரிய ரவுடி : முலாயம்சிங் அதிரடி

நான் மிகப்பெரிய ரவுடி : முலாயம்சிங் அதிரடி

உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சிக்குள் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. 


 

 
முதல்வர் அகிலேஷ் யாதவ், அவரது சித்தப்பா சிவ்பால் யாதவை, அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் நீக்கினார். இதற்கு, அகிலேஷின் தந்தை முலாயம்சிங் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
மேலும், அகிலேஷ் தனிக்கட்சி தொடங்கப்போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதை அகிலேஷ் மறுத்துள்ளார். ஆனால், அப்படி ஒரு முடிவு எடுத்ததை, அகிலேஷே என்னிடம் கூறினார் என்று சிவ்பால் யாதவ் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த முலாயம்சிங் யாதவ் “சமாஜ்வாடி கட்சியை மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். யாராக இருந்தாலும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  கட்சியிலும், குடும்பத்திலும் ஏற்பட்டுள்ள குழப்பம் என்னை காயப்படுத்தியுள்ளது.  
 
கட்சியில் இருக்கும் சில இளைஞர்கள் தங்களை ரவுடிகளாக நினைக்கிறார்கள். உங்களை பார்த்து நான் பயப்படவில்லை. உங்களையெல்லாம் விட நான் மிகப்பெரிய ரவுடி. 
 
சிவ்பால் யாதவ் எனக்காகவும், கட்சிக்காகவும் ஏராளமான விஷயங்களை செய்துள்ளார். அதை யாரும் மறந்துவிட முடியாது.  குடிகாரர்களையும், குண்டர்களையும் கட்சியில் சேர்த்ததால்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.