வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 6 ஜூலை 2015 (21:58 IST)

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் வறுமையில் வாழ்பவர்கள் அதிகம் - ஆய்வு முடிவு

மத்தியில் ஆட்சி புரியும் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிகமான மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள் என்று சர்வே முடிவுகள் கூறுகிறது.
 
முதன்முறையாக இந்தியா முழுவதிலும் தேசிய சமூக பொருளாதார சாதி சர்வே எடுக்கப்பட்டது. 1931ஆம் ஆண்டிற்கு பிறகு சமூகவியல் அடிப்படையில் இத்தலைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த சர்வே பணி நாடெங்கும் எடுக்கப்பட்டு வருகிறது.
 

 
இந்த ஆய்வுகளின் முடிவில் இந்தியாவின் கிராமங்களில் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களில் வசிக்கும் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாக தெரிய வந்திருக்கிறது.
 
மேலும், பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம்தான் 24% ஏழைகளைக் கொண்டு முதலிலும், அதே பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் 2 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மூன்றாவது இடத்தில் 19 சதவீதத்துடன் பீகார் உள்ளது.
 
இந்த சர்வே மொத்தம் 17.9 கோடி ஊரக வீடுகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 31.26% வறுமையாக வாழ்கிறார்கள். 13.25% வீடுகள் ஓரறை கொண்ட குடிசை வீடுகளாக இருக்கின்றன. 3.64% வீடுகளில் 16 – 59 வயதுக்குட்பட்ட வயதில் குடும்ப உறுப்பினர்கள் இல்லை.
 
21.53% வீடுகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு சொந்தமானவை. 23.52% வீடுகளில் கல்வியறிவு கொண்ட குடும்ப உறுப்பினர்கள் இல்லை. 29.97% வீடுகளில் நிலமற்றவர்களே வாழ்கின்றனர். அவர்கள் அன்றாட தினக்கூலி வேலை செய்பவர்களாக இருக்கின்றனர்.