வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (14:22 IST)

ரிசர்வ் வங்கி பெயரில் பண மோசடி கும்பல்: ரகுராம் ராஜன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ரிசர்வ் வங்கி பெயரில் பண மோசடி கும்பல்: ரகுராம் ராஜன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ரிசர்வ் வங்கியின் பெயரில் பண மோசடி கும்பல் போலி இ-மெயில் அனுப்பினால் அதை நம்பி ஏமாற வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


 

 
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இது குறித்து கூறுகையில், "ரிசர்வ் வங்கி சார்பில் பணம் செலுத்துமாறு ஒருபோதும் இ-மெயில் அனுப்பப்படுவதில்லை.
 
ரிசர்வ் வங்கி மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு பண பரிவர்த்தனை நடைபெறுகிறது.
 
மேலும் ரூ.8 லட்சம் கோடி அரசு பத்திரங்கள் எங்களிடம் உள்ளன. எனவே எங்களுக்கு உங்களது பணம் தேவையில்லை.
 
போலி இ-மெயில்களை நம்பி மோசடி பேர்வழிகளுக்கு இரையாகி விடாதீர்கள். மேலும், லாட்டரியில் உங்களுக்கு பணம் கிடைத்துள்ளது.
 
நாங்கள் ரூ.50 லட்சம் அனுப்பி வைக்கிறோம், பணபரிவர்த்தனை கட்டணமாக ரூ.20 ஆயிரத்தை அனுப்பி வையுங்கள் என்று இ-மெயில் வந்தால், நீங்கள் அதனை கண்டுகொள்ளாதீர்கள்.
 
அவை மோசடி செய்பவர்களின் வேலை. ரிசர்வ் வங்கி சார்பில் நாங்கள் ஒரு போதும் உங்களிடம் பணம் கேட்கவும் மாட்டோம்" " என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.