வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (14:20 IST)

ஜனவரி முதல் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்?

வருகிற ஜனவரி முதல், வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களிள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பின் இந்திய மக்களிடம் இருந்த பணப் புழுக்கம் முற்றிலும் குறைந்து போனது.
 
வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வங்கிகளில் ஒரு வாரத்திற்கு ரூ.24 ஆயிரமும், ஏ.டி. எம் மையங்கலில் அதிக பட்சம் 2 ஆயிரத்து 500 ரூபாயும் எடுக்க முடிந்தது. புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டும் இன்னும் புழக்கத்திற்கு வரவில்லை. எனவே, தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். 
 
மோடி கூறிய 50 நாட்கள் முடிவடையும் தருணத்தில் உள்ளது. மேலும்,பழைய ரூபாய் நோட்டுகளை  மாற்ற கடைசி தேதியான டிசம்பர் 30ம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, இதே நிலை நீடிக்குமா என்ற அச்சம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.
 
இந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் தற்போது போதுமான அளவுக்கு பணம் இருப்பதாலும், புதிதாக அச்சடிக்கப்பட்டு வரும் 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதாலும், வருகிற ஜனவரி முதல் பணத்தட்டுப்பாடு நீங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.