வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2015 (20:01 IST)

இந்தியாவின் தேவ தூதுவர் நரேந்திர மோடி என்று நான் ஏமாந்துவிட்டேன் - ராம் ஜெத்மலானி

இந்தியாவை காப்பற்றும் கடவுள் அனுப்பிய தேவ தூதுவராக நரேந்திர மோடியை நினைத்து, நான் ஏமாந்துவிட்டேன், என்று பிரபல மூத்த வழக்கறிஞரும், மக்களவை உறுப்பினருமான
ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.


நேற்று பாட்னாவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ராம் ஜெத்மலானி, அப்பொழுது பேசும்பொழுது "கடந்த மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடியை நாட்டின் தலைவராகப் பிரசாரம் செய்ததற்காக பிராயச்சித்தம் தேடி தற்போது நான் வந்துள்ளேன். இந்தியாவைக் காப்பற்ற கடவுள் அனுப்பிய தேவ தூதராக மோடியை நினைத்திருந்தேன். ஆனால், தற்போது நான் ஏமாற்றப்பட்டேன்.
 
வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை கொண்டு வருவதற்கு, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசும், பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசும் தவறிவிட்டன. கருப்புப் பணத்தைக் கொண்டு வருவதற்கு நாம் உண்மையிலேயே விரும்பினால், ப.சிதம்பரமும், அருண் ஜேட்லியும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
 
ஜெர்மனியில் கருப்புப் பணத்தைப் பதுக்கிவைத்துள்ள 1,400 நபர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தால், அந்தப் பெயர்களை வெளியிட ஜெர்மனி அரசு தயாராக இருந்தது.

இதுதொடர்பாக, பாஜக தலைவர்களுக்கு நான்  கடிதம் எழுதினேன். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. என்னை முட்டாளாக்கியது போல், சட்டமன்றத்தேர்தலில் பீகார் மக்களையும் பாஜக முட்டாளாக்க முடியாது" இவ்வாறு அவர் பேசியுள்ளார்