செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2015 (19:39 IST)

என்னைப் பற்றிய சமூக வலைதள அவதூறு கருத்துக்களை அச்சடித்தால் தாஜ்மஹாலை மூடிவிடலாம் - மோடி

சமூக வலதளங்களில் நேர்மையான கருத்துக்களை அதுவும் நாகரீகமான வார்த்தைகளால் பகிர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
மேலும் இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-
 
ட்விட்டர் சமூக வலைத்தளத்தை நான் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் என் ட்விட்டர் கணக்கை பின்பற்றுகின்றனர். இந்நிலையில் வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைக்கும் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மோசமான, நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.
 
இது, வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் பற்றி வரும் அவதூறு கருத்துக்களை காகிதங்களில் அச்சடித்தால் அவற்றைக்கொண்டு தாஜ்மஹாலையே மூடி விடலாம். அந்த அளவிற்க்கு இருக்கிறது.
 
நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதால் சமூக வலைதளங்கள் தொடங்கப்பட்ட நோக்கம் நிறைவேறாது என்று குறிப்பிட்டுள்ளார்.