1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2016 (18:14 IST)

மோடி தாவூத் சந்திப்பு?: மத்திய அரசு மறுப்பு

தாவூத்தை சந்தித்த மோடி?: மத்திய அரசு மறுப்பு

பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் சென்ற போது மும்பை தாக்குதல் குற்றவாளியும் நிலலுலக தாவுமான தாவூத் இப்ராஹிம்மை சந்தித்ததாக உத்தர பிரதேச அமைச்சர் அசாம் கான் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.


 
 
அசாம் கானின் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டு என கூறியுள்ளது மத்திய அரசு.
 
கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று நவாஷ் ஷெரிப்பை சந்தித்த பிரதமர் மோடி தாவூத் இப்ராஹிம்மையும் சந்தித்துள்ளார் என அடிக்கடி சர்ச்சையை கிளப்பும் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அமைச்சர் அசாம் கான் கூறியுள்ளார்.


 
 
பிரதமர் மோடி நாவாஸ் ஷெரிப்பை சந்தித்தபோது, மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியும் நவாஸ் ஷெரிப்பின் குடும்பத்துடன் இருந்துள்ளார் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என கூறிய அசாம் கான், மோடி வேறு யாரையெல்லாம் சந்தித்தார் என்பது மூடி மறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
 
அசாம் கானின் இந்த கருத்தை மறுத்துள்ள மத்திய அரசு இது அடிப்படை ஆதாரமற்ற ஒரு கருத்து என தெரிவித்துள்ளது. பாஜக மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியும் அசாம் கானின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.