வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (17:42 IST)

விவசாயிகளுக்கான 'டிடி கிசான்' தொலைக்காட்சியை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

முற்றிலும் விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகள் மட்டுமே இடம் பெறும் வேளாண் டி.வி.யை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
 

 
டெல்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி டிடி கிசான் தொலைக்காட்சி சேவையை துவக்கி வைத்தார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, உலக அளவில் ஹெக்டேருக்கு சராசரியாக 3 டன் தானியம் விளைகிறது. ஆனால் இந்தியாவிலோ சராசரியாக ஹெக்டேர் ஒன்றுக்கு விளைச்சல் 2 டன்னாக மட்டுமே உள்ளது என்றார்.
 
மேலும் பேசிய அவர், இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்றால் நாம் நமது கிராமங்களை முன்னேற்ற வேண்டும் என்றார். ஏற்கனவே பல சேனல்கள் இருக்கும் போது இது எதற்கு என நினைக்கலாம். பல்வேறு விளையாட்டு சேனல்கள் இருப்பதால் மக்களுக்கு பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் விவசாயத்திலும் ஆர்வம் ஏற்படவே இந்த பிரத்யேக தொலைக்காட்சி துவக்கப்பட்டுள்ளதாக மோடி கூறியுள்ளார். விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்ற அவர், அதன் மூலம் விவசாயத்தை நோக்கி இளைஞர்களை ஈர்க்க வேண்டும் என்றார்.
 
ஜெய் ஜவான் ஜெய் கிசான் முழக்கத்தை லால்பகதூர் சாஸ்திரி உருவாக்கியதாக கூறிய மோடி கிராமங்களை பற்றி முதலில் நாம் நினைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.