வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 11 நவம்பர் 2016 (12:54 IST)

ஹவாலா தொழிலை இரண்டே நாளில் முடக்கிய மோடியின் ஐடியா!!

பிரதமர் மோடியின் இந்த தீடீர் அறிவிப்பால், ஹவாலா தொழில் இரண்டு நாட்களில் அடியோடு முடங்கியது. 


 
 
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த நோட்டுகளை கருப்பு பணமாக வைத்திருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
வருமானத்துக்கு பொருந்தாத அந்த பணத்தை வங்கியில் செலுத்தினால், வரியுடன் 200 சதவீத அபராதம் செலுத்த நேரிடும். எனவே, வேறு வழியின்றி அந்த நோட்டுகளை தீயிட்டு எரிக்கவோ, கிழித்து வீசவோ செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 
குறிப்பாக, இந்த நடவடிக்கையால், ஹவாலா தொழில் அடியோடு முடங்கி விட்டது. கருப்பு பணத்தை மட்டுமே நம்பி இந்த தொழில் நடந்து வந்தது. 
 
இந்த தொழில் மூலம், நாள்தோறும் ரூ.3 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் நடக்கும். மும்பை, குஜராத் போன்ற இடங்களில் பெரிய அளவில் இது செயல்பட்டு வந்தது. 
 
சூதாட்டம், வைரம் மற்றும் தங்க வர்த்தகம், கட்டுமான தொழில் ஆகியவற்றில் இந்த பணம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
 
ஆனால், கருப்பு பண சந்தையின் ஆணிவேரையே அசைக்கும் வகையில், மோடியின் அறிவிப்பு அமைந்திருப்பதால், ஹவாலா வர்த்தகம் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.