வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By தமிழரசு
Last Updated : சனி, 27 ஜூன் 2015 (14:26 IST)

இந்திய மாட்டிறைச்சியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் மோடி அரசு!

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சீன நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது அனைவருக்கும் தெரியும். இதில் என்ன சிறப்பு என்றால், மாட்டு இறைச்சியை சீனாவுக்கு எற்றுமதி செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
 
எனவே மாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கான தகுதி ஆய்வை மேற்கொள்ள சீன அதிகாரிகள் அடுத்த மாதம் இந்தியா வருகின்றனர். இந்த ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ளது. மேலும் மாதுளை பழம், பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள், வெண்டைக்காய் ஆகிய பொருட்களும் ஏற்றுமதி ஆகும்.
 
சீனா மாட்டு இறைச்சிக்கான உலகின் மிகப்பெரிய சந்தை என்பதும், இரண்டு நாட்களுக்கு முன்னர் நாற்பது ஆண்டு பழமையான இறைச்சிகளை விற்பது கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.