வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Modified: செவ்வாய், 24 ஜூன் 2014 (12:53 IST)

மொபைல் போன் கதிர்வீச்சினால் எந்த பாதிப்பும் ஏற்படாது - மருத்துவர்கள் தகவல்

மொபைல் போன்களில் இருந்தும், மொபைல் கோபுரங்களில் இருந்தும்  வெளியாகும் கதிர்வீச்சினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் அதிகம் பயன்படுத்தும் மொபைல் போன்களில் இருந்தும், மொபைல் கோபுரங்களில் இருந்தும்  வெளியாகும் கதிர்வீச்சினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில், மொபைல் போன்களில் இருந்தும், மொபைல் கோபுரங்களில் இருந்தும்  வெளியாகும் கதிர்வீச்சினால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும், இந்த கதிர்வீச்சினால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக வதந்திகள் பரவியதே இந்த பயத்திற்கு காரணமெனவும் தெரிவிக்கப்பட்டது.
 
புகழ்பெற்ற மருத்துவர்கள் பலர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் பொது இயக்குனர் ராஜன் ஸ் மத்யுஸ், மொபைல் போன் கதிர்வீச்சால் உடல் நலப் பாதிப்பு ஏற்படும் என்பதற்கான அறிவியல் ஆய்வுகள் ஏதும் இல்லை எனக்  குறிப்பிட்டார்.
 
மொபைல் போன்கள் பயன்பாட்டின் மூலம், ஒருவரின் தூக்கம், மூளை   செயல்பாடு போன்றவற்றில் மாற்றம் ஏற்படுமே தவிர கருவில் இருக்கும் குழந்தை, புற்று நோய் பாதிப்பு போன்றவை ஏற்பட இது காரணமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.