Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கடும் அமளிக்கிடையே ஆனந்தமாய் தூங்கிய எம்.எல்.ஏ.க்கள்: வைரல் வீடியோ!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 16 மே 2017 (12:05 IST)
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுக்கொண்டார். 

 
 
பாஜக ஆட்சி அமைந்த பின்னர் நேற்று சட்டசபை தொடரின் முதல் கூட்டம் தொடங்கியது. அப்போது, ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திடீரென அமளியில் ஈடுபட்டனர். 
 
சட்டசபை நிகழ்ச்சிகள் தூர்தர்ஷன் மூலம் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்பட்டது. அதில், எம்.எல்.ஏ.க்கள் பலர் தூங்கி உள்ளனர். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

நன்றி: ANI


இதில் மேலும் படிக்கவும் :