செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2016 (05:36 IST)

’பரபரப்பு’ - கட்சி தாவிய எம்.எல்.ஏ.வின் பதவி பறிப்பு!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. 


 
 
மாயாவதியின் பகுஜன் சமாஜ் எதிர்க்கட்சியாக உள்ளது. இம்மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இந்நிலையில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, தேர்தலில் போட்டியிட பணம் பெற்று, சீட் வழங்குகிறார், என, அக்கட்சியின் மூத்த தலைவரும், பிற்படுத்தப்பட்ட சமூக தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான சுவாமி பிரசாத் மவுரியா, குற்றஞ்சாட்டினார். 
 
இதை அடுத்து, அவர் அவர், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, பகுஜன் லோக்தந்திரிக் மஞ்ச் என்ற அமைப்பை உருவாக்கினார்.
 
அவர், இன்று பா.ஜ., தலைவர்களை அழைத்து பிரம்மாண்ட விழா நடத்துகிறார். இந்நிலையில், கட்சி தாவல் தடைச் சட்டத்தில், அவரின் எம்.எல்.ஏ., பதவியை பறிக்கக் கோரி, பகுஜன் சமாஜ் சார்பில், உத்திரப் பிரதேச மாநில சபாநாயகர் மாதா பிரசாத் பாண்டேயிடம் மனு அளிக்கப்பட்டது. இதை விசாரித்த சபாநாயகர், மவுரியாவின், எம்.எல்.ஏ., பதவியை பறித்து, நேற்று உத்தரவிட்டார்.
 
இதனால் உத்திரப் பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.