செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (21:11 IST)

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் உறவி மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மாயாவதி

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா? என்பது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
“மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலங்களில் ஆளும் பாஜக அரசுகளும், பொதுமக்கள் நலன்களுக்கான ராஜதர்மத்தை கடைப்பிடிக்கவில்லை. எனவே, கூட்டணி கட்சிகளான குறிப்பாக, பஞ்சாப் அகாலி தளம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி உறவை மறுசிந்தனை செய்ய வேண்டும். இதைத்தான் மக்களும் சிந்திக்கத் தொடங்கி உள்ளனர்.
 
பாஜகவின் செயல்பாடுகளைப் பார்த்து கூட்டணி கட்சிகளும் கவலை அடைந்தாலும் கூட்டணி தர்மத்தை பின்பற்றி அமைதியாக இருக்கின்றனர். ஆனால், மக்கள் நலன் கருதி அவாகள் ஏதாவது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குறுகிய எண்ணம் கொண்ட பாஜக கட்சியின் செயல்பாடுகள் தொடரும்.” என்று கூறியுள்ளார்.
 
லலித் மோடி சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த மாயாவதி, கறைபடிந்த மற்றும் ஊழல் அமைச்சர்களை பாதுகாக்கும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.