1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (05:34 IST)

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரான தயாநிதி-கலாநிதிமாறன் சகோதர்கள்

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரும், சன் குழும அதிபருமான கலாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
 

 
2 ஜி வழக்கு இந்தியாவில் பெரும் புயலை கிளப்பியது. மேலும், தமிழகத்தில் தேர்தலின் போது, திமுக வெற்றிக்கு வேட்டு வைத்து. இந்த முறைகேட்டுடன் ஏர்செல் - மேக்சிஸ் தொடர்பு உடையது. இந்த வழக்கு, விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த வழக்கில் தங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் சிபிஐ கைது செய்யாமல் இருக்க ஜாமீன் கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் கடந்த 2ஆம் தேதி தாக்கல் செய்திருந்தனர். இருவருக்கும் வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்றது.
 
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரும், சன் குழும அதிபருமான கலாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு ஆஜரானார்கள். பரபரப்பான நிலையில், இந்த வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக டெல்லி அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.