1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:28 IST)

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார். அதனை வங்கிகளில் செலுத்தி புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.


 
 
வங்கி வாசலில் பொதுமக்கள் தவியாய் வைத்து நெடுநேரம் காத்திருந்து தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மற்றி வருகின்றனர் சாமானியர்கள். ஆனால் எந்த அமைச்சர்களும் வங்கிகளில் வந்து வரிசையில் நின்று பணத்தை மாற்றவில்லை. இந்நிலையில் அவர்களிடம் இருந்த பல லட்சம் ரூபாய் ரொக்கங்களை அவர்கள் எப்படி மாற்றினார்கள் என்ற கேள்வி எழும்பியுள்ளது.
 
சமீபத்தில் காமென்வெல்த் மனித உரிமை அமைப்பு அமைச்சர்களின் சொத்து பட்டியலை சேகரித்தது. அமைச்சர்களும் தேவையான தகவலை அவர்களுக்கு அளித்தனர். 2016 மார்ச் மாதம் வரை அவர்களிடம் இருந்த சொத்து பட்டியலை அமைச்சர்கள் அதில் கூறியிருக்கிறார்கள்.
 
அதில் 76 அமைச்சர்களில் 40 அமைச்சர்களிடம் அதிக அளவிலான பணம் கையில் இருப்பதாக கூறியுள்ளனர். 17 அமைச்சர்கள் 2 லட்சத்துக்கும் மேல் ரொக்கமாக வைத்திருந்துள்ளனர். அமைச்சர்களில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ரூபாய் 65 லட்சத்துக்கும் மேல் ரொக்கமாக வைத்திருந்துள்ளார்.
 
அதே போல மத்திய இணையமைச்சர்கள் ஸ்ரீபாத் யசோ நாயக் 22 லட்சமும் ஹன்ஸ்ராஜ் 10 லட்சமும் வைத்திருந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் வரை இந்த தொகையை ரொக்கமாக வைத்திருந்த இவர்கள் தங்கள் பணத்தை எப்படி மாற்றினார்கள் அல்லது வங்கியில் டெபாசிட் செய்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.