மீண்டும் நானே பிரதமரா? அலட்டாமல் பதில் அளித்த மன்மோகன் சிங்

Last Updated: திங்கள், 29 ஏப்ரல் 2019 (09:42 IST)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், மீண்டும் பிரதமராக பதவியேற்பது குறித்து பதில் அளித்துள்ளார். 
 
மன்மோகன் சிங் இந்தியாவின் பதினான்காவது பிரதமராக இருந்தவர். மே 22, 2004-ல் இந்திய பிரதமராக பதவியேற்றார். 2014 ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக் பதவி வகித்தார். மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர்தான். 
 
பிரதமராகும் முன்னர் 1991 முதல் 1996 வரை பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். 
மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.
 
இந்நிலையில், மன்மோகன் சிங்கிடம் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெரும் பட்சத்தில் மீண்டும் நீங்களே பிரமராவீர்களா என கேட்கப்பட்டதற்கு அவர், நான் 10 ஆண்டுகள் இந்த நாட்டின் பிரதமராக இருந்துவிட்டேன். எனது ஆட்சி காலத்தில் சிறப்பான திறனை வழங்க முயற்சித்தேன். 
 
இதனை தொடர்ந்து பொது வாழ்க்கையில்தான் இருந்துகொண்டுள்ளேன். ஆனால் இளைஞர்கள் தலைமை தாங்க வேண்டிய நேரம் இது என பதிலளித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :