இரண்டாவது கணவரைத் தேடும் பிரபல நடிகை!

Dinesh| Last Modified புதன், 14 செப்டம்பர் 2016 (13:22 IST)
நேபாளத்தைச் சேர்ந்த, நடிகை மனீஷா கொய்ராலா இந்தி மற்றும் நேபாள மொழியில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

 
இந்நிலையில், அவர் நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபர் சாம்ராட் தகால் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பின், 2012 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டார். 
 
இதற்கிடையில் மனீஷாவை புற்று நோய் தாக்கியது. இதில் தன் அழகையும், தலைமுடியையும் இழந்த மனீஷா கடுமையான போராட்டத்துக்கு பிறகு புற்றுநோய் பிடியிலிருந்து மீண்டு, மீண்டும் நடிக்க ஆரம்பித்து குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர், மும்பையில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் தனியாக வசிக்கிறார். 
 
தனிமையில் வசிக்கும் அவரை, கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று மன வேதனையில் உள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் கூறியதாவது, "எனது தனிமையை போக்க அடுத்த ஆண்டு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கப்போகிறேன். மேலும் இரண்டாவது திருமணத்திற்கும் தயாராகிவிட்டேன். என் மீது அன்பு செலுத்தும் ஒருவரை திருமணம் செய்துக்கொள்ள தேடிக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.

 
அவர், தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் மாப்பிள்ளை படத்தில் நடித்தார். கடைசியாக ”ஒரு மெல்லிய கோடு” என்ற படத்தில் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :