Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இளம்பெண்ணுடன் உல்லாசம் : வீடியோ எடுத்து திருமணத்தை நிறுத்திய தொழில் அதிபர் கைது


Murugan| Last Modified புதன், 28 டிசம்பர் 2016 (19:42 IST)
இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்ததோடு, அதை அப்பென்ணிற்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

 

 
மும்பை சாக்கிநாக்கா பகுதியில் வசிப்பவர் சகூர்கான்(45). இவர் ஒரு தொழில் அதிபர் ஆவார். இவர் அந்த பகுதியில் உள்ள 22வயது இளம்பெண்ணை தனது காம வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும், அதை ரகசியமாக வீடியோ எடுத்து, அதைக் காட்டி அப்பெண்ணை மீண்டும் மீண்டும் மிரட்டி கடந்த 6 மாத காலமாக அவரை கற்பழிந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் அப்பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரின் பெற்றோர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதை அறிந்த சகூர்கான், அந்த பெண்ணை திருமணம் செய்ய இருந்த வாலிபரின் செல்போனுக்கு, அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை அனுப்பி வைத்தார். 
 
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். மேலும், இதுபற்றி அறிந்த பெண் வீட்டார், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சகூர்கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :