வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 29 மே 2015 (04:23 IST)

வங்கதேசப் பயணம்: மோடியுன் இணைகிறார் மம்தா பானர்ஜி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு சுற்றுப்பயணமாக வங்கதேசம் செல்லும் போது, அவருடன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் உடன் செல்கிறார்.
 
வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு சுற்றுப்பயணமாக ஜூன் 6 ஆம் தேதி தேதி வங்கதேசம் செல்கிறார். அங்கு ஜூன் 7ஆம் தேதியும் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
 
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் வங்க தேசம் செல்கிறார்.
 
இது குறித்து அம்மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறியதாவது:-
 
வங்க தேசத்திற்கும் மேற்கு வங்க மாநிலத்திற்கும் நல்ல ஒற்றுமை உள்ளது.  வித்தியாசம் என்பதே இல்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இரு நாடுகளுக்குமான தேசிய கீதத்தை மேற்கு வங்கத்தை சேர்ந்த ரவீந்தரநாத் தாகூர் தான் எழுதியுள்ளார் என்பதை நினைவு கூறலாம். எனவே, இரு தலைவர்களும் இணைந்து செல்வதால் மேலும், நட்புறவு பலப்படும் என்றார்.
 
பாஜக அரசு பொறுப்பேற்ற பின்பு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட போதிலும், மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
 
ஆனால், தற்போது மோடி வங்கதேசம் செல்லும் நிலையில், அவருடன் வங்கதேசம் செல்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.