வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By k.N.Vadivel
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2015 (01:13 IST)

பிரபல சினிமா பாடகி புற்றுநோயால் மரணம்

பிரபல மலையாள சினிமா பாடகி ராதிகா திலக் புற்றுநோய் தாக்குதல் காரணமாக  உயிரிழந்தார்.
 

 
கடந்த 1991ஆம் ஆண்டு ‘ஒற்றையாள் பட்டாளம்’ என்ற படம் மூலம் பாடகியாக அறிமுகமானார் ராதிகா திலக்(45). இதுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை பாடியுள்ளார். மலையாள திரையுலகில் அதிக அளவில் ஹிட் பாடல்களை கொடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் ராதிகா திலக்.
 
கடந்த சில நாட்களாக இவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக, எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார்.  இதனையடுத்து, அவரது உடல் கொச்சியில் அடக்கம் செய்யப்பட்டது.
 
ராதிகா திலக் மறைவுக்கு மலையாள திரையுலகத்தை சேர்ந்த நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனால், மலையாள திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.