விற்பனையில் சக்கைப்போடு.. 2 லட்சம் வரை விலையை குறைத்த மஹிந்திரா XUV700!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டு வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 மாடலின் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக உள்ளது மஹிந்திரா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக மஹிந்திரா நிறுவனம் தனது புதிய XUV700 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் வெளியாகி 3 ஆண்டுகளுக்கு 2 லட்சம் கார்கள் இந்தியாவில் விற்றுள்ளது.
இதை கொண்டாடும் விதமாக எக்ஸ்யூவி700 மாடல்கள் மீது மேலும் விலை தள்ளுபடியை அறிவித்துள்ளது மஹிந்திரா நிறுவனம். அதன்படி AX7-L All wheel drive மாடலுக்கு ரூ.2.2 லட்சம் விலை குறைக்கப்பட்டு ரூ.24.99 லட்சமாக விற்பனையாகிறது. அதுபோல AX7 MT மாடலுக்கும் ரூ.1.67 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.19.69 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த 4 மாதங்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
XUV 700 மாடலில் MX, AX3, AX5 S, AX5, AX7 மற்றும் AX7 L ஆகிய வேரியண்டுகள் பெட்ரோல், டீசல் இரு வகைகளிலும் பல வண்ணங்களில் அறிமுகமாகி விற்பனையாகி வருகின்றன.
Edit by Prasanth.K