வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (10:17 IST)

மகாராஷ்டிரா-ஹரியானாவில் பா.ஜ.க. முன்னிலை: தனித்து ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கிறது.
 
காலை 10:00 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க. 112 இடங்களிலும், சிவசேனா 50 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் 56 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 46 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க. தனித்து ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. அக்கட்சியின் மாநில தலைவரான தேவேந்திர பட்னவிஸ் மற்றும் பங்கஜா முண்டே ஆகியோரிடையே முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
 
அதே போல் ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 இடங்களில் பா.ஜ.க. 48 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் 17 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், ஹரியானா ஜன்கிட் காங்கிரஸ் 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளது. இங்கும் பா.ஜ.க. தனித்து ஆட்சியை பிடிக்கிறது.