1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 1 ஜூன் 2017 (14:32 IST)

5 லட்சம் விவசாயிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் திடீரென சுமார் 5 லட்சம் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளுடன் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.


 

 
வரும் பருவ காலத்தில் விதைப்பு உட்பட இனி எந்த விவாசாய வேலையும் செய்ய போவதில்லை என போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல டன் பாலை கீழே கொட்டியும்; காய்கறிகளை சாலையில் வீசியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய கடன்களை முழுமையான ரத்து செய்ய வேண்டும். இலவச மின்சாரம் வழங்க வேண்டும். உற்பத்திக்கு ஏற்ற தகுந்த விலை நிர்ணயிக்க வேண்டும். நீர்ப்பாசனம் மற்றும் பாலுக்கான அதிக விலையை வழங்குதல் போன்ற கோரிக்கைகளுடன் போராடி வருகின்றனர்.
 
இவர்களின் போராட்டத்துக்கு மாநிலம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து விவசாய உற்பத்தி சந்தை குழு வர்த்தகர்கள் கூறியதாவது:-
 
இன்னும் 2 நாட்கள் இந்த போராட்டம் தொடர்ந்தால், பால் மற்றும் காய்கறிகள் சந்தையில் கிடைப்பதில் பெரிய சிக்கல் ஏற்படும். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
 
இதையடுத்து விவாயிகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி மாநில முதல்வர் தேவேந்திர பத்னாவிஸை சந்தித்து பேசினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. விவாயிகளின் போராட்டத்திற்கு பின்னால் சிவ சேனா உள்ளதாக கூறப்படுகிறது.