Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல்வரின் மனைவி குட்டை ஆடையுடன் சூப்பர் நடிகருடன் இருக்கும் புகைப்படம்: சர்ச்சை ஆரம்பம்!

முதல்வரின் மனைவி குட்டை ஆடையுடன் சூப்பர் நடிகருடன் இருக்கும் புகைப்படம்: சர்ச்சை ஆரம்பம்!


Caston| Last Modified வியாழன், 1 டிசம்பர் 2016 (16:36 IST)
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா தனது முதல் இசை ஆல்பத்தில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார். இந்த புகைப்படம் வெளியாக இது மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
 
எதிர்கட்சியான காங்கிரஸ் இந்த விவகாரத்தில் ஆளும் பாஜகவையும் முதல்வரையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. அம்ருதா முதலமைச்சர் மனைவியாக இருந்தாலும் அவர் ஒரு வங்கியாளர், பாடகர் தற்போது நடிகையாகவும் உருவெடுத்துள்ளார்.
 
கடந்த வருடம் பாலிவுட்டில் பின்னணி பாடகியாக அறிமுகமான அம்ருதா தனது முதல் இசை ஆல்பத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் கடந்த செவ்வாய் கிழமை நடந்தது. இந்த புகைப்படத்தை மும்பையை சேர்ந்த பத்திரிகை வெளியிட இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
 
இதனை மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் டுவிட்டர் பதிவிட பரபரப்பாகியது. முதல்வரின் மனைவி என்பதால் இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
 
இதனை டுவிட்டரில் பதிவு செய்த சஞ்சய் நிருபம் ரூபாய் நோட்டு தடையால் 80 பேர் இறந்துள்ளனர். ஆனால் அதனால் பயனடைந்தவர்கள் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இதனை முதல்வரும், பிரதமரும் கவனிப்பார்களா என கருத்துடன் பதிவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :