வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 29 செப்டம்பர் 2014 (08:49 IST)

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: 288 பதவிகளுக்கு 7000 க்கும் மேற்பட்ட வேட்பு மனு

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 7401 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
அதிகபட்சமாக நான்டெட் தெற்கு தொகுதியில் 91 பேரும், குறைந்த பட்சமாக குகாகர், மாஹிம் மற்றும் குடல் தொகுதிகளில் தலா 9 பேரும் மனு தாக்கல் செய்ததாக தெரியவந்துள்ளது.
 
காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக்குழு தலைவரான நாராயண் ரானே குடல் தொகுதியில் போட்டியிடுகிறார். அம்மாநில முதலமைச்சராக இருந்து பதவி விலகிய பிரித்விராஜ் சவான் மற்றும் உள்துறை அமைச்சரா இருந்த ஆர். ஆர். பாட்டில் ஆகியோரும் தங்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
 
சவான், கராட் தொகுதியில் போட்டியிடுகிறார். ராஜ் தாக்கரே இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறிவிட்டார். காங்கிரஸ் கட்சி 288 தொகுதிகளுக்கும், தேசியவாத காங்கிரஸ் 286 தொகுதிகளுக்கும், பாஜக சார்பில் 257 தொகுதிகளுக்கும், சிவசேனா 286 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 
 
பாஜக வேட்பாளராக பார்லே தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜாவிற்கு ஆதரவாகவும், பைகுல்லா தொகுதியில் போட்டியிடும் மும்பை தாதா அருண் காவ்லியின் மகள் கீதாவிற்கு ஆதரவாகவும் தாங்கள் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என சிவசேனா கூறியது குறிப்பிடத்தக்கது.
 
வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் அங்கு ஐந்து முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.