வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Modified: புதன், 20 ஜனவரி 2016 (16:58 IST)

சென்னை அணிக்கு தடை; சுப்பிரமணியன் சுவாமி மேல்முறையீடு

ஐபிஎல் போட்களில் விளையாட சென்னை அணிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று பாஜக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.


 
 
2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கோரி சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட  உச்ச நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், சென்னை அணியின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி சுப்பிரமணியன் சாமியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்தனர்.
 
இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்து இந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.
 
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டர் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, சென்னை அணிக்கு தற்போது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். லோதா குழு விதித்த தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் தயக்கம் காட்டி வருகிறது. என்று அவர் குறிப்பிட்டுள்ளார்