1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (17:38 IST)

பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் சிக்கல்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குபதிவு வரும் 7 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதே நாளில் தேர்தல் அறிக்கையை பாரதீய ஜனதா கட்சி வெளியிட திட்டமிட்டிருப்பது அக்கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Murali Manohar Joshi
பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நரேந்திர மோடி அணியினர் சில திருத்தங்களை மேற்கொள்ள கூறியதால் அறிக்கையை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் 7 ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளது. அன்றைய தினம் அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குபதிவு தொடங்குகிறது.

தேர்தல் விதிமுறைகளின் படி தேர்தல் நடக்கும் வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரச்சாரம், வாக்குச் சேகரிப்பு போன்றவை நிறுத்தப்பட வேண்டும். அதன்படி வரும் 5 ஆம் தேதி மாலை 5 மணியுடன் முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. தொலைக்காட்சி, நாளிதழ்களுக்கும், பிரச்சாரம் தொடர்பான செய்தி படங்களை வெளியிடவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
 
இதற்கிடையே தேர்தல் அறிக்கையை வரும் 7 ஆம் தேதி வெளியீடுவது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, தேர்தல் அறிக்கையை வெளியிடுவது அரசியல் கட்சிகளின் உரிமை என்று கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், தேர்தல் அறிக்கையை வெளியிடுவது தொடர்பாக பாஜக மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.
Namo Pillow
நமோ டீ கடை, நமோ காபி கடை, நமோ பேனா, நமோ பனியன், நமோ மூக்குப்பொடி டப்பா போன்ற விளம்பரங்களைத் தவிர வேறெந்த வாக்குறுதியையும் கொடுக்க பாஜக விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடுதான் இந்த தாமதமான தேர்தல் அறிக்கைக்கான காரணம்.
 
ஆகமொத்தம் நமோ சர்க்கார்...மக்களுக்கு நாமம்தான் சார்..!