வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2017 (21:55 IST)

ஆன்லைன் மூலம் கேஸ் பதிவு செய்தால் 5 ரூபாய் சலுகை

டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை நாட்டு மக்களிடம் ஊக்குவிக்கும் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது ஆன்லைன் மூலம் கேஸ் பதிவு செய்து கட்டணம் செலுத்தினால் 5 ரூபாய் சலுகை என அறிவித்துள்ளது.


 

 
500 ,அற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு ரொக்க பரிவர்த்தனையை தவிர்த்து நாட்டு மக்களை டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய ஊக்குவித்து வருகிறது.
 
அதன்படி நாடு முழுவதும் பணத்தட்டுபாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் ரொக்க பரிவர்த்தனையை தவிர்த்து வருகின்றனர். அதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
 
இந்நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் கேஸ் பதிவு செய்து கட்டணம் செலுத்தினால் 5 ரூபாய் சலுகை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நெட் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தலாம்.