வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : புதன், 27 ஜூலை 2016 (08:42 IST)

32 வருடம் கழித்து இணைந்த காதலர்கள்: திருமணத்தை நடத்தி வைத்தார் காதலியின் மகள்

32 வருடம் கழித்து இணைந்த காதலர்கள்: திருமணத்தை நடத்தி வைத்தார் காதலியின் மகள்

கேரள மாநிலத்தில் 32 வருடங்களுக்கு பிறகு, காதலித்தவரை திருமணம் செய்து வைத்துள்ளார் காதலியின் மகள்.

 
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், கடந்த 1984-ஆண்டு, ஓச்சிறை கிராமத்தை சேர்ந்த அனிதா என்ற பெண் பத்தாம் வகுப்பு படித்து வந்தார், இவர் சிபிஐ (எம்) கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ளவார். அப்போது, அந்த நிகழ்வுகளுக்கு அடிக்கடி வரும் சிபிஐ (எம்) கட்சி கட்சியை சேர்ந்த ஆசியரியரக பணிபுரியும் விக்ரமனுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு இராணுவத்தில் உதவி  பொறியாளராக இருந்த ஆனித்தாவின் தந்தை ”வயது மூத்தவரை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்” என்று எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், விக்ரமனை மறந்துவிட்டு தான் கூறும் பையனை திருமணம் செய்யாவிட்டால், விக்ரமன் உயிருக்கு ஆபத்து வரும் என்று மிரட்டி, அனித்தாவின் திருமணத்தை நடத்தினார் தந்தை. இதை அடுத்து இவர்கள் இருவருக்கும், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.

விக்ரமன் அனிதாவின் பிரிவு தாங்காமல் ஊரைவிட்டு போய் சவறை கிராமத்தில் தனது வாழ்கையை தொடங்கினார். தனது நேரத்தை சிபிஐ (எம்) கட்சிக்காகவே செலவிட்டார். இந்நிலையில், அனிதாவின் கணவர் குடிக்கு அடிமையாகி, மூத்த மகளுக்கு 8 வயது இருக்கும் போது, மரணமடைந்தார். இந்நிலையில், 2016 ஆண்டு ஓச்சிறை கிராமத்தில் பஞ்சாயத்து  தேர்தலில் போட்டியிடுவாதற்காக பிரச்சாரத்திற்கு வந்த விக்ரமன், அனித்தாவை பார்த்துள்ளார். அனிதா விக்ரமனை பற்றி மூத்த மகள் ஆதிராவிடம் கூறி உள்ளார். இவர்கள் காதல் கதையை கேட்ட உடன், ஆதிரா, இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். விக்ரமன் இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.

ஆதிராவின் நீண்ட வற்புறுத்தலுக்கு பிறகு, ”உனக்கு திருமணம் முடிந்த முடிந்த பிறகு வேண்டுமானால் இதை பற்றி பேசலாம்” என விக்ரமன் கூறி உள்ளார். இதை அடுத்து, ஆதிரா தனது திருமணத்தை விரைவுப்படுத்து, ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து ஜூலை 21, 2016 தேதி, விக்ரமனுகும், அனிதாவிற்கும் திருமணம் நடைபெற்றது. எந்த தந்தை இவர்கள் காதலுக்கு எதிர்பு தெரிவித்தாரோ அவரே, தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.