வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 5 அக்டோபர் 2016 (14:44 IST)

வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் கண்ணை குத்தியதில் சிறுமி பார்வை இழக்கும் அபாயம்

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் பேனாவால் குத்தியதால் மாணவியின் கண் பார்வையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

 
ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டம் காங்கிரியை சேர்ந்த தேசரி மனோகர் மற்றும் தேசரி சுஜாதா. இவர்களது மகள் தேசரி சனிகா அருகில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்று வருகிறாள்.
 
இந்நிலையில், கடந்த மாதம் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி ஆசிரியர் பி. ஸ்ரீனிவாச ரெட்டி, சிறுமி தேசரி சனிகாவைத் திட்டியுள்ளார். அவரின் கேள்விகளுக்கு சனிகா சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறி, பயமுறுத்தும் முயற்சியாக ஆசிரியர், பேனாவால் சனிகாவின் கண்களைக் குத்தியுள்ளார்.
 
இதனால் சனிகாவின் இடது கண் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குண்டூர் மாவட்டத்திலுள்ள சங்கர நேத்ராலயா உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்ற தேசரி குடும்பம், தற்போது சிறுமியின் கண்களும், எதிர்காலமும் இருண்டு விடுமோ என்ற அச்சத்துடன் இருக்கிறது.
 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் சிறுமியின் தந்தை தேசரி மனோகர் மற்றும் தாய் தேசரி சுஜாதா ஆகியோர் புகார் அளித்துள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.