பெண்கள் நடனமாடும் பார்களுக்கு உரிமம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


Abimukatheesh| Last Modified திங்கள், 25 ஏப்ரல் 2016 (16:22 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்கள் நடனமாடும் பார்களுக்கு உரிமம் வழங்க அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
 
மகாராஷ்டிர மாநில அரசு பெண்கள் நடமாடும் பார்களை மூடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது; இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெண்கள் நடனமாடும் பார்களுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை நிராகரித்துடன், பெண்கள் சாலையோரத்தில் பிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடுவதே மேல், என்று கருத்து தெரிவித்தது.
 
மகாராஷ்டிரா மாநில அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் சிவ கீர்த்தி சிங், பெண்கள் பார்களில் சம்பாதிப்பது அவர்களது உரிமை என்று கூறினர். 
மேலும், உச்ச நீதிமன்றம், நடன பார்களின் உழியர்களுக்கான காவல் துறை விசாரனையை முடித்து விட்டு, ஒரு வாரத்திற்குள் அவர்களுக்கான உரிமம் வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
 
இதையடுத்து, மாகாராஷ்டிரா அரசை, பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
 


இதில் மேலும் படிக்கவும் :