1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2015 (16:01 IST)

லிபியாவில் மீண்டும் படகு விபத்து - 700 பேரை பலி; 28 பேர் உயிருடன் மீட்பு

லிபியா அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 700 பேர் உயிரிழந்திருக்கலாம் என உயிர் தப்பியவர்கள் கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு, லிபியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்ததை ஒட்டி, அங்கிருந்து ஏராளமானோர் இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். இந்நிலையில், லிபியா கடற்பகுதி அருகே, படகு ஒன்று திடீரென்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
 
இந்நிலையில் இத்தாலியின் லாம்ப்துசா தீவில் இருந்து 193 கிலோ மீட்டர் தொலைவிலும், லிபியாவின் கடற்பகுதியில் இருந்து 96 கிலோ மீட்டர் தொலைவிலும் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்தப் படகில் பயணம் செய்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தெரியவில்லை.
 

 
இந்த விபத்தில் 700க்கும் மேற்பட்டோர் விபத்தில் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஐ.நா. சபையின் அகதிகளுக்கான அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கர்லோட்டா சமி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "விபத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள், அந்தப் படகில் 700க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்ததாக தெரிவித்தனர்' என்றார்.
 
இதே பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 2 படகுகள் விபத்துக்குள்ளானதில், 450 பேர் பலியாகினர். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து இதுவரை லிபியா, இத்தாலி இடையிலான கடற்பகுதியில் நிகழ்ந்த படகு விபத்துகளில் 1,500 அகதிகள் பலியாகியுள்ளனர்.
 
இதுகுறித்து இத்தாலி நாட்டுக் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், "லிபியாவின் வடக்கு கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு சனிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தப் படகில் இருந்தவர்கள், அவ்வழியே சென்ற போர்ச்சுகல் நாட்டுக் கப்பலில் இருந்தவர்களிடம் உதவி கோருவதற்காக, படகின் ஒரே பகுதியில் திரண்டதால் அது கவிழ்ந்துள்ளது. இதுவரை 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.