வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 17 டிசம்பர் 2014 (15:10 IST)

ரவுடிகள் நிகழ்த்தும் வன்முறைகள்தான் முத்தப் போராட்டத்துக்குக் காரணம்: கேரள உயர் நீதிமன்றம் கருத்து

கலாசாரத்தைப் பாதுகாக்கும் போர்வையில், ரவுடிகள் நிகழ்த்தும் வன்முறைகள்தான், முத்தப் போராட்டத்துக்கு வழி வகுக்கிறது என்று கேரள உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
 
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒழுக்கக்கேடான செயல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலை பாஜக இளைஞர் அணி தொண்டர்கள் சமீபத்தில் சூறையாடினர்.
 
இதையடுத்து, கேரளா, புதுடெல்லி, கொல்கத்தா, சென்னை என பல நகரங்களில் முத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், கேரள மாநிலத்தில் சமீபத்தில் 'கிஸ் ஆப் லவ்' என்ற பெயரில் சில அமைப்புகள் முத்தப் போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்தை எதிர்த்து, முத்தப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
 
இந்தத் தாக்குதலில் கைதான யுவ மோர்ச்சாவை சேர்ந்த 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி கமால் பாட்சா, முத்தப் போராட்டம் ஒழுக்கக்கேடான செயல் என்று கருத்து தெரிவித்தார்.
 
மேலும், "நமது கலாசாரத்தைப் பாதுகாக்கும் போர்வையில், ரவுடிகள் நிகழ்த்தும் வன்முறைகள்தான், முத்தப் போராட்டத்துக்கு வழி வகுக்கிறது" என்றும் கூறினார்.