செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2015 (22:59 IST)

கீர்த்தி ஆசாத் விவகாரம்: மோடி தலையிட ராகுல் கோரிக்கை

பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது பல கோடி ரூபாய் முறைகேடு  செய்துள்ளார் எனவே, அவர் தார்மீக பொறுப்பேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி வருகிறது.
 
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்த தலைவர் ராகுல் காந்தி கூறுகையில்,  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும். மேலும், கீர்த்தி ஆசாத்திற்கு காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு அளிக்கும் என்றார்.