வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 29 ஆகஸ்ட் 2018 (07:51 IST)

கேரளா சென்று ராகுல் காந்தி செய்த காரியம் - கேரள மக்கள் நெகிழ்ச்சி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை  நேற்று பார்வையிட்டபோது செய்த காரியம் கேரள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர். லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து அனுப்பப்படுகிறது. 
இந்நிலையில் கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டார். செங்கனூர் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1001 வீடுகள் கட்டித்தரப்படும் என அவர் கூறினார். பின் ராகுல் ஆலப்புழா செல்வதற்கு தயாராக இருந்தார்.
 
அப்போது செங்கனூர் நிவாரண முகாமில் தங்கியிருந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆலப்புழா மருத்துவ கல்லூரிக்கு  கொண்டு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.
இதனை கவனித்த ராகுல் காந்தி தனது ஹெலிகாப்டரை நிறுத்தி முதலில் ஏர் ஆம்புலன்சுக்கு அனுமதி கொடுக்குமாறு கேட்டு கொண்டார். இதையடுத்து, அந்த ஏர் ஆம்புலன்ஸ் புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரம் கழித்து ராகுல் காந்தி ஆலப்புழாவுக்கு சென்றார்.
 
ராகுல் காந்தியின் இந்த செயல் கேரள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.