Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திலீப்பின் திட்டத்தை ஏற்கனவே அறிந்த பிரபலங்கள் - பட்டியலை தயார் செய்த போலீசார்

திங்கள், 31 ஜூலை 2017 (17:54 IST)

Widgets Magazine

நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பின் திட்டத்தை கேரள சினிமா பிரபலங்கள் பலர் ஏற்கனவே அறிந்திருந்ததாக தற்போது திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.


 

 
கேரள நடிகை கடந்த பிப்ரவரி மாதம் காரில் சென்று கொண்டிருந்த போது, 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது. அதன் பின் அவரை காரிலேயே பாலியல் பலாத்காரமும் செய்தது. இந்த சம்பவம் கேரள சினிமா உலகை உலுக்கியது.
 
இந்த வழக்கில் நடிகர் திலீப் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி காவ்யா மாதவனிடமும் போலீசார் சமீபத்தில் விசாரணை நடத்தினர். 
 
இந்நிலையில், மலையாள மனோரமா ஆன்லைன் பத்திரிக்கை, திலீப்பின் திட்டத்தை பல சினிமா பிரபலங்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தனர் என செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அந்த பிரபலங்களின் பெயர்களை சேகரித்துள்ள போலீசார், விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
காவ்யா மாதவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நடிகையை ஏதோ செய்யப் போகிறார்கள் என ஏற்கனவே எனக்கு தெரியும். ஆனால், இப்படி செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை என வாக்குமூலம் கொடுத்தார் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சிறுமியை பலாத்காரம் செய்த நபரை சுட்டுக்கொன்ற கும்பல்!

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 43 வயது நபரை மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதம் ...

news

பான் எண் ரத்து செய்யப்படும்: மத்திய அரசு தரும் கடைசி வாய்ப்பு இதுதான்!!

ஆதார் எண்ணை பான் எண்ணை இணைப்பதற்கு கடசி வாய்ப்பளித்துள்ளது மத்திய அரசு. இவ்வாறு ...

news

காச நோய் ஊழியரின் கண்ணிர் கடிதம்....

நான் இந்த கடிதத்தை RNTCP ஊழியர்களின் சார்பாகவும் அவர்களது குடும்பத்தின் சார்பாகவும் ...

news

பரோலில் வருகிறார் பேரறிவாளன்: சட்டத்தில் இடமுள்ளது என அமைச்சர் தகவல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் ...

Widgets Magazine Widgets Magazine