வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 21 செப்டம்பர் 2014 (12:31 IST)

கேரள அரசுக்கு எதிராக மதுக்கடை பார் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி

மதுக்கடை பார்களை மூட உத்தரவிட்ட கேரள அரசுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 
மாநிலம் முழுவதும் மதுவிலக்கை ஏற்படுத்த கேரள மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி அந்த மாநிலத்தில் செயல்பட்டு வந்த 418 மதுக்கடை பார்களை மூட சமீபத்தில், உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மதுக்கடை பார் உரிமையாளர்கள் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
 
இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.டி.சங்கரன், பி.டி.ராஜன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், கேரள அரசு புதிய மதுவிலக்கு கொள்கையை அறிவித்துள்ள நிலையில், இந்த ரிட் வழக்குகள் வீணானவை எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.
 
மேலும், புதிய மதுவிலக்கு கொள்கையை எதிர்த்து, ஒற்றை நீதிபதியை வழக்குதாரர்கள் நாடலாம் என நீதிபதிகள் கூறினர்.