வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 28 பிப்ரவரி 2015 (16:51 IST)

கேரளாவில் ராட்சத எரிகல் விழுந்ததாகத் தகவல்: பேரிடர் தடுப்பு துறையினர் விரைந்தனர்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் எரிகல் தாக்கி பள்ளம் ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து அம்மாநில இயற்கை பேரிடர் தடுப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
 
கேரள மாநிலத்திரலுள்ள திரிச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களின் வான்வெளியில் மிகப்பெரிய எரிகோளம் காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் பீதியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
மேலும்,  அந்த எரிகோளம் மெதுவாக நகர்ந்து சென்றதாகவும், அப்போது அங்குள்ள வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கரிமல்லூர் கிராமத்தில் ராட்சத எரிகல் விழுந்ததைப் போல மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, சுற்றுப்புற தரைப்பகுதி கருகிப்போய் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதைத் தொடர்ந்து, கேரள மாநில இயற்கை பேரிடர் தடுப்பு துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
 
இது குறித்து ஆய்வு மேற்கொண்டப்பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.