Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நீங்கள் தானே என்று கேட்ட டிஜிபி; அலறிய அமைச்சர்


Abimukatheesh| Last Updated: வியாழன், 13 ஏப்ரல் 2017 (16:02 IST)
கேரள மாநில காவல்துறை புலனாய்வு டிஜிபி, வேணாண் அமைச்சர் வீட்டுக்கு செல்வதிற்கு பதில் வருவாய் துறை அமைச்சர் வீட்டுக்கு சென்றதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

 

 
கேரள மாநில காவல்துறை புலனாய்வு பிரிவின் கூடுதல் டிஜிபியும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான முகம்மது யாசின், அமைச்சர் யாரென்றே தெரியாமல் அவரை சந்திக்க சென்றது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது.
 
டிஜிபி முகம்மது யாசின் வேளாண் துறை அமைச்சரை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு அமைச்சரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட பின் நீங்கள் தானே சுனில்குமார் என்று டிஜிபி கேட்டுள்ளார். உடனே அமைச்சர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
இதையடுத்து டிஜிபி வீடு மாறி வந்ததை புரிந்துக்கொண்ட அமைச்சர், டிஜிபியுடன் அவரது ஊழியர் ஒருவரை அமைச்சர் சுனில்குமார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். புலனாய்வு துறை டிஜிபி அமைச்சர் யாரென்று தெரிந்து வைத்துக்கொள்ளாத சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :