1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (15:22 IST)

காஷ்மீர் வெள்ளம்: 300 கி.மீ நீளமுள்ள ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

காஷ்மீரில் கன மழை வெள்ளப் பெருக்கு காரணமாக கடந்த 13 நாட்களாக மூடிக்கிடந்த ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் காஷ்மீரை சென்றடைய 300 கி.மீ நீளமுள்ள ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையையே பயன்படுத்த வேண்டும். ஆனால் எதிர்பாரா விதமாக காஷ்மீரில் கன மழை பெய்து வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது.

இந்நிலையில் இந்த வெள்ளப் பெருக்கால் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி அதிகாலை சுமார் 5 கிலோ மீட்டர் நீளமுள்ள இச்சாலை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. ஆதலால், இந்த நெடுஞ்சாலை கடந்த 13 நாட்களாக மூடப்பட்டிருந்தது.

ராணுவ வீரர்கள் மற்றும் பொறியாளர்கள் இச்சாலையை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து  ஜம்மு - காஷ்மீர் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.