வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (01:00 IST)

கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

கன்னட புரட்சிக்கர எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடாகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


 

கன்னட எழுத்து உலகில் தனி முத்திரை பதித்தவர் எம்.எம்.கல்பர்கி. மார்கா 4 என்ற கல்பர்கியின் 100 ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காக, சாகித்ய அகாடமி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. மேலும், பம்பா, ருபதுங்கா போன்ற பல்வேறு புகழ் பெற்ற விருதுகளை கல்பர்கி பெற்றுள்ளார்.
 
இந்த நிலையில், தர்வாத்தில் உள்ள  எம்.எம்.கல்பர்கியின் இல்லத்திற்கு சென்ற மர்ம நபர்கள் சிலர், அவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு, கதவை கல்பர்கி திறந்துள்ளார்.
 
அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில், கல்பர்கி மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.
 
உடனே, கல்பர்கியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது, கல்பர்கியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்னகவே, கல்பர்கி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
 

 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கல்பர்கி படுகொலைக்கு எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கல்பர்கியின் மரணம், கர்நாடகாவில் பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.