வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (14:30 IST)

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது: கர்நாடக சட்டசபையில் தீர்மானம்!

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது: கர்நாடக சட்டசபையில் தீர்மானம்!

தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் வரும் 27-ஆம் தேதி வரை காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 4 வாரத்தில் அமைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது.


 
 
ஆனால் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீரையும் திறக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை இன்று கூட்டி இது குறித்து விவாதித்தனர்.
 
இந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் விதமாக தீர்மானம் ஒன்றை ஒருமனதாக நிறைவேற்றி உள்ளனர். கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காகவே காவிரி உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் வேறு எதற்காகவும் அணையை திறக்க கூடாது என அதில் வலியுறுத்தியுள்ளனர்.
 
இந்த தீர்மானத்தை கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தாக்கல் செய்தார். அதன் பின்னர் உறுப்பினர்கள் அதன் மீது விவாதம் செய்து ஒரு மனதாக அதனை நிறைவேற்றினர்.