மாட்டிடம் இருந்து தம்பியை காப்பாற்றிய ரியல் ஜல்லிக்கட்டு வீராங்கனை: குவியும் பாராட்டுக்கள்

Last Updated: வியாழன், 15 பிப்ரவரி 2018 (15:45 IST)
ஜல்லிக்கட்டு காளையை பயிற்சி பெற்றவர்கள் அடக்கி வரும் நிலையில் 8வயது சிறுமி ஒருவர் தனது தம்பியை மாட்டிடம் இருந்து காப்பாற்ற எடுத்த பல்வேறு முயற்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பனார்பாக் தாலுகாவில் வீட்டு வாசலில் தனது தம்பியுடன் விளையாடி கொண்டிருந்தார் 8 வயது சிறுமி. அப்போது ஒரு மாடு ஆவேசமாக இருவரையும் நோக்கி பாய்ந்தது. உடனே தனது உடன்பிறந்த தம்பியை கையில் எடுத்து கொண்டு மாட்டிடம் இருந்து தப்பிக்க போராடுகிறார் அந்த சிறுமி. மாடு விடாமல் முட்ட முயற்சித்தபோதிலும் தைரியமாக மாட்டுடன் போராடி தனது தம்பியை காப்பாற்றினார்.

அப்போது சிறுமியின் சத்தம் கேட்டு அருகில் இருந்த ஒருவர் ஒரு கட்டையை எடுத்து மாட்டை விரட்டினார். ரியல் ஜல்லிக்கட்டு வீராங்கனையாக மாறிய அந்த 8 வயது சிறுமிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

video thanks to news7webdunia

இதில் மேலும் படிக்கவும் :