Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சினிமாவில் வாய்ப்பு; இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற தயாரிப்பாளருக்கு தர்ம அடி


Murugan| Last Modified திங்கள், 13 மார்ச் 2017 (16:04 IST)
சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி, இளம்பெண்ணை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய கன்னட சினிமா தயாரிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 
2004ம் ஆண்டு வெளியான ‘ப்ரீதிமாயே ஹுஷாரூ’ என்ற கன்னட படத்தை தயாரித்தவர் விரேஷ். இவரிடம் ஒரு இளம்பெண் சினிமா வாய்ப்பு கேட்டுள்ளார். தான் அடுத்து தயாரிக்கும் படத்தில் கண்டிப்பாக அந்த பெண்ணை நடிக்க வைப்பதாக விரேஷ் உறுதியளித்துள்ளார். 
 
இந்நிலையில், கடந்த 8ம் தேதி அந்த இளம்பெண் அவரது வீட்டில் தனியாக இருந்தபோது விரேஷ் அங்கு சென்றுள்ளார். அவரிடம் சினிமா பற்றி பேச தொடங்கிய விரேஷ், மெல்ல மெல்ல அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியான அந்த பெண், அவரிடமிருந்து தப்பி வீட்டின் வெளியே ஓடி, கதவை மூடி தாழ்பாள் போட்டு விட்டு, அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு இதுபற்றி தெரிவித்தார். 
 
அவர்கள், விரேஷிற்கு தர்ம அடி கொடுத்தனர். அதன்பின் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனார். இந்த விவகாரம் கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :