பல வருடங்களுக்கு முன் கமல் செய்ததை இன்று செய்த கேரள அரசு


sivalingam| Last Modified புதன், 15 நவம்பர் 2017 (02:02 IST)
நடிகர் கமல்ஹாசன் பல விஷயங்களில் தீர்க்கதரிசியாக இருந்துள்ளார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கமல்ஹாசன் தனது வாழ்வில் பல வருடங்களுக்கு முன் செய்ததை இன்று கேரள அரசு செய்துள்ளது.

 


கமல்ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசன் ஆகியோர்களுக்கு பிறப்பு சான்றிதழை பெறும்போது சாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட மறுத்தார். ஆனால் பின்னர் 21 வயதான பின்னர் ஸ்ருதிஹாசன் இந்து மதத்தையும், அக்சராஹாசன் எந்த மதத்தையும் பின்பற்றாமலும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிறப்பு சான்றிதழில் ஜாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட தேவையில்லை என்பது சமீபத்தில் கேரளா அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையையும் கேரள அரசு வெளியிட்டுள்ளது. கேரள அரசின் இந்த முடிவுக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 


இதில் மேலும் படிக்கவும் :