Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

7 உச்சநீதிமன்ற நீதிபதிகளும் என் முன் ஆஜராக வேண்டும். நீதிபதி கர்ணன் அதிரடி உத்தரவு

Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2017 (23:54 IST)

Widgets Magazine

சமீபத்தில் கொல்கத்தா நீதிபதி கர்ணன் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்ந்ததோடு மட்டுமின்றி நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.


 


இந்த நிலையில் தன்னை ஆஜராக உத்தரவு பிறப்பித்த ஏழு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் வரும் 28-ம் தேதி காலை 11.30 மணி அளவில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த ஏழு பேர்களில் இந்தியாவின் தலைமை நீதிபதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற நீதிபதிகளையே ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கர்ணன் உத்தரவிட்டது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி ஏழு நீதிபதிகளும் தங்களது பாஸ்போர்ட்டினை 15 நாள்களுக்குள் டெல்லி போலீஸ் இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

பதவியில் இருக்கும் ஒரு நீதிபதியினை ஆஜராக சொல்வதற்கு இன்னொரு நீதிமன்றத்திற்கு உரிமையில்லை என கூறிய நீதிபதி கர்ணன் அவர்களே இப்போது ஏழு நீதிபதிகளை ஆஜராக உத்தரவிட்டிருப்பது முரண்பாடுகளின் மொத்த உருவமாக பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆப்கானிஸ்தான் மீது பயங்கர தாக்குதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி யுத்தம்

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அரசு அதிரடியாக சற்று முன்னர் பயங்கர சக்தி ...

news

பூமியில் ஒரு செயற்கை சொர்க்கம்: சவுதி அரேபியா அரசின் பிரமாண்டமான பிளான்

சொர்க்கம் என்ற ஒன்று இருக்கின்றதா? இல்லையா?, அப்படியே இருந்தாலும் அது எப்படி இருக்கும் ...

news

சாட்டிலைட் மூலம் நீர்நிலைகளை தேடும் ஆந்திரா: டாஸ்மாக் வைக்க இடம் தேடும் தமிழகம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக பதவியேற்று மாநிலத்தின் வளர்ச்சிக்கு ...

news

எஸ்சி,எஸ்டி இட ஒதுக்கீடு ரத்து: உபி முதல்வர் யோகியின் அடுத்த அதிரடி

உத்தரபிரதேச மாநில முதல்வர் பதவியேற்றதில் இருந்து நாளொரு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ...

Widgets Magazine Widgets Magazine